search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலர் தூவி மரியாதை"

    • கே.ஆர்.பி. அணை 65 ஆண்டுகள் முடிந்து 66- வது ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது.
    • தென்பெண்ணை ஆற்றில் மலர் தூவி மரியாதை செய்ய தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக முடிவு செய்து செயல்படுத்தினர்.

    கிருஷ்ணகிரி,

    தமிழகத்தினுடைய வடக்கு மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓடுகின்ற தென்பெண்ணையாற்றின் குறிக்கே 1952-ல் அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டு 1957-ல் திறப்பு விழா செய்யப்பட்ட கே.ஆர்.பி. அணை 65 ஆண்டுகள் முடிந்து 66- வது ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது.

    இந்த மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ள இந்த அணையால் வெளியூர்க ளுக்கு வேலைக்கு போய்க்கொண்டிருந்த மக்கள் விவசாயம் செய்து இந்த நாட்டு மக்களுக்காக உணவு உற்பத்தியை கொடுப்பது மட்டுமல்லாமல் காய்கறிகள், பழங்கள், மலர்கள் போன்றவைகளை உற்பத்தி செய்து இந்த நாட்டின் தேவையை பூர்த்தி செய்கின்றனர் என்று தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் கே.எம். ராமகவுண்டர் கூறியுள்ளார்.

    எனவே காமராஜரை நினைவு கூறும் வகையில் தென்பெண்ணை ஆற்றில் மலர் தூவி மரியாதை செய்ய தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக முடிவு செய்து செயல்படுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் ராஜா, வெங்கடேசன். அனுமந்த ராசு, சக்திசங்கர், தேன்மொழி, இஸ்ரவேல், ஜெயபால், சின்னசாமி, கோபி.நடராஜ், பரசுரா மன், அனுமந்தன், கோவிந்தராஜ். திம்மராயன், தேவராஜ், நாராயணன், கணேசன்,சக்திவேல், சின்னசாமி, முனுசாமி, கார்த்திக், ஆவின் கோவிந்தராஜ் உள்ளிட்ட பல விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.

    • 24 ஆண்டுகளுக்கு பின் ஜருகு பெரிய ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளது.
    • பூஜை செய்து வழிபட்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள மானியதஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஜருகு கிராமத்தில் முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்கும் சின்னேரி, புட்டான் ஏரி மற்றும் 45 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய ஏரி உள்ளது.

    இந்த ஏரிகள் பல ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் இருந்தது. இதனை நம்பி இருந்த விவசாய நிலங்களும் தரிசாக இருந்தது.

    தற்பொழுது கடந்த இரண்டு மாதங்களாக பெய்த கன மழையின் காரணமாக 24 ஆண்டுகளுக்கு பின் ஜருகு பெரிய ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் இதனால் பாசன வசதி பெறுகிறது.

    இதன் காரணமாக பெருமகிழ்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் பாஜக மாவட்ட துணை தலைவரும் மானியதஹள்ளி ஊராட்சி மன்ற தலைவருமான சிவசக்தி தலைமையில் ஏரியின் உபரி நீர் வெளியேறும் பகுதியில் ஒன்று கூடி வருண பகவானுக்கு நன்றி தெரிவித்து கொண்டாடும் வகையில் பூஜை செய்து வழிபட்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.

    மேலும் மாரியம்மன் கோவில்கள் முனியப்பன் கோவில், சின்னேரி, புட்டான் ஏரி, பெரிய ஏரி, உள்ளிட்ட நீர் ஆதாரங்களில் 9 ஆடுகள் வெட்டி பூஜை செய்து ஊர் மக்கள் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. ஒட்டுமொத்த ஊர் பொதுமக்களும் 24 ஆண்டுகளுக்கு பின் ஏரிகளில் நீர் நிரம்பியதை திருவிழா போலவே கொண்டாடி வருகின்றனர்.

    மேலும் இந்த ஏரிகள் நிரம்பிய பின் உபரி நீரானது நீரோடைகள் வழியாக சின்னம்பள்ளியில் உள்ள நாகாவதி ஆற்றோடு கலந்து மேட்டூர் அணையை சென்றடைகிறது. அவ்வாறு வீணாகும் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த நீரோடைகளின் குறுக்கே தடுப்பணைகளை அமைத்து நீர் ஆதாரங்களை பெருக்க வேண்டும் என பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. சார்பில் நடந்தது
    • ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் பங்கேற்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

    ராணிபேட்டை சிப்காட் பாரதி நகரில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலக வளாகம் முன்பு மாநில சுற்றுச்சூழல் துணை செயலாளர் வினோத் காந்தி, ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இதில் மாவட்ட துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, நகர செயலாளர் பூங்காவனம், ராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதாவினோத், நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், வினோத்,குமார் உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக முத்துக்கடை,நவல்பூர் ஆகிய பகுதிகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

    • மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர் கடல் அன்னைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
    • கடல் நீரிலிருந்து பயோ டீசல் தயாரித்து கடல் வாகனங்களுக்கு வழங்க வேண்டும், பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும், கடலில் கழிவுகளை கலக்கும் ஆலைகளுக்கும், கப்பல்களுக்கும் எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், அந்த பகுதி மக்கள் உள்பட மீனவ பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    உலகம் முழுவதும் ஜூன் 8 ம் தேதி உலக பெருங்கடல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு சார்பில் குளச்சல் கடற்கரையில் உலக பெருங்கடல் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

    மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர் கடல் அன்னைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு பொதுச்செயலாளர் அருட்பணி. சர்ச்சில் தலைமையில் மீனவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    உறுதிமொழியில் கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதை தடுப்போம், குப்பைகளை கடலில் கொட்ட மாட்டோம், கடலையும், கடல் உயிரினங்களையும் பாதுகாப்போம் என உறுதிமொழியில் கூறினர்.

    மேலும் கடல் நீரிலிருந்து பயோ டீசல் தயாரித்து கடல் வாகனங்களுக்கு வழங்க வேண்டும், பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும், கடலில் கழிவுகளை கலக்கும் ஆலைகளுக்கும், கப்பல்களுக்கும் எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், அந்த பகுதி மக்கள் உள்பட மீனவ பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×